• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடல் கடந்த போர்ச்சுகீசிய கைமணம்… மக்ரூன் வெரைட்டியில் மாஸ் காட்டும் காயல்பட்டினம்…

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
கடல் கடந்த போர்ச்சுகீசிய கைமணம்… மக்ரூன் வெரைட்டியில் மாஸ் காட்டும் காயல்பட்டினம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2025 6:45 PM IST

Thoothukudi Macaroon: போர்ச்சுக்கீசிய மாலுமிகள் மூலமாக தூத்துக்குடிக்கு வந்த இந்த பதார்த்தம் தற்போது பல பகுதிகளில் தயாரிக்கப்பட்டாலும் தூத்துக்குடி மக்ரூன் தயாரிப்பிற்கு பெயர் பெற்று விளங்குவதற்குச் சிறப்பான காரணமும் உள்ளது.

X

கடல்

கடல் கடந்த போர்ச்சுகீசிய கைமணம்… மக்ரூன் வெரைட்டியில் மாஸ் காட்டும் காயல்பட்டினம்…

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவுகள் ஃபேமஸாக இருக்கின்றது, அதற்கென்று ஓர் தனி அடையாளமும் ஓர் வரலாறும் இருக்கின்றது. அப்படி தூத்துக்குடி மக்ரூனுக்கு பெயர் பெற்றதாகும்.

போர்ச்சுக்கீசிய மாலுமிகள் மூலமாக தூத்துக்குடிக்கு வந்த இந்த பதார்த்தம் தற்போது பல பகுதிகளில் தயாரிக்கப்பட்டாலும் தூத்துக்குடி மக்ரூன் தயாரிப்பிற்கு பெயர் பெற்று விளங்குவதற்குச் சிறப்பான காரணமும் உள்ளது.

மக்ரூனானது முட்டை, சீனி உடன் பாதாம் பருப்பு சேர்த்து தயார் செய்யப்படுவதாகும். அந்த காலத்தில் பாதாம் பருப்பை இறக்குமதி செய்து மக்ரூனில் பயன்படுத்துவது என்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. அதனால் தூத்துக்குடிக்கு அருகே தேரிக்காடு பகுதியில் முந்திரி அதிகம் விளைந்த நிலையில் அந்த முந்திரி பருப்பை பயன்படுத்தி மக்ரூன் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனால் தான் மக்ரூனில் இன்றளவும் பாரம்பரியமாக முந்திரி பயன்படுத்தப்படுகிறது. மேலும் தூத்துக்குடி அருகே காயல்பட்டினம் பகுதியில் மக்ரூனில் பலவகை நட்ஸ் மட்டுமல்லாமல் அந்த காலத்தில் இருந்த பாரம்பரியமான பாதாம் சேர்த்த மக்ரூம் வரை தயாரித்து வருகின்றனர். என்னதான் மக்ரூனுக்கு தேவையான சேர்மானம் என்பது குறைவாக இருந்தாலும் அதன் தயாரிப்பு என்பது எளிதானது அல்ல.

அத்தகைய மக்ரூன் தயாரிப்பு குறித்து காயல்பட்டினம் வியாபாரி ஒருவர் கூறுகையில், “தூத்துக்குடி மக்ரூன் என்பது போர்ச்சுக்கீசியத்தின் உணவாகும். உணவுக்குப் பின்பு அவர்கள் எடுத்துக்கொள்ளும் டெசர்டாக இது இருந்து வந்தது. இந்தியாவிற்கு கடல் கடந்து வணிகம் செய்ய வந்த போது இரு காதல் ஜோடிகள் இந்த மக்ரூனை முதல் முறையாக தூத்துக்குடியில் அறிமுகப்படுத்தினர். இப்படித்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்ரூன் நுழைந்தது.

மேலும் அவர்கள் அறிமுகப்படுத்திய மக்ரூனின் செய்முறையில் பாதாம் சேர்க்கப்படும், அதுவே மக்ரூனின் உண்மையான ரெசிபி. ஆனால் பாதாமானது பிற நாடுகளில் இருந்து இறக்குமதியே செய்யப்பட்டது. அதனால் மக்ரூனின் விலை அதிகரித்து காணப்பட்டதால், அதற்குப் பதிலாக தூத்துக்குடி தேரிக்காட்டில் அதிகளவு விளைச்சல் ஆகும் முந்திரி பருப்பை பயன்படுத்தி மக்ரூன் செய்யத் தொடங்கினர். இவ்வாறே தூத்துக்குடி மக்ரூன் உருவானது. மற்ற இடங்களிலும் தூத்துக்குடி மக்ரூனின் ரெசிபியைப் பின்பற்றியே மக்ரூன் தயாரிக்கப்படுகிறது” என்றார்.

மேலும் அவர்களின் பாரம்பரிய கடைப் பற்றிக் கூறுகையில், “நாங்கள் மூன்றாவது தலைமுறையாக இந்த பேக்கரி தொழிலை நடத்தி வருகிறோம். அப்பா, தாத்தா காலத்தில் பெரிய அளவில் காணப்பட்ட மக்ரூன் நாளடைவில் ஓர் பைட்டிலேயே ருசி அறிய வேண்டும் என்பதற்காக தற்போது உள்ள பேபி மக்ரூன் உருவானது. மேலும் எங்களிடம் மக்ரூனின் ஒரிஜினல் ரெசிபியான பாதாம் மக்ரூன், பிஸ்தா மக்ரூன், ஹசில்நட், வால்நட் போன்ற அனைத்து வகையான மக்ரூனும் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :

Thoothukkudi,Tamil Nadu

தமிழ் செய்திகள்/உணவு/

Thoothukudi Macaroon: கடல் கடந்த போர்ச்சுகீசிய கைமணம்… மக்ரூன் வெரைட்டியில் மாஸ் காட்டும் காயல்பட்டினம்…

Read More

Previous Post

“விராட் கண்ணீர் எனக்கு மட்டும் தான் தெரியும்“ அனுஷ்கா சர்மா உருக்கம்

Next Post

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது: ட்ரம்ப் | america stopped nuclear war between india pakistan says donald trump

Next Post
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது: ட்ரம்ப் | america stopped nuclear war between india pakistan says donald trump

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது: ட்ரம்ப் | america stopped nuclear war between india pakistan says donald trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin