Last Updated:
விராட் கோலி ஏற்கனவே டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் அவர் தொடர்ந்து விளையாட இருக்கிறார்
ஆபரேஷன் சிந்தூர் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் (DGMO) ராஜிவ் கய் விராட் கோலி குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி பேட்டிங், மைதானத்தில் ஆக்ரோஷமான செயல்பாடுகளால் கவனம் ஈர்த்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளன என்றும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகும் முடிவு அத்தனை எளிதானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
123 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 9ஆயிரத்து 230 ரன்களைக் குவித்த விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள், 31 அரை சதங்களை விளாசியுள்ளார். கடந்த வாரத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதிர்ச்சி அடங்குவதற்குள் விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
விராட் கோலி ஏற்கனவே டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் அவர் தொடர்ந்து விளையாட இருக்கிறார். சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்டிலிருந்து விராட் கோலி திடீரென ஓய்வை அறிவித்துள்ளது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் ராஜிவ் கய் இன்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். இயல்பாக அவர் பேசிக் கொண்டிருந்தபோது, விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்.
இன்றைக்கு நாம் கிரிக்கெட் குறித்து பேசுவது சரியானதாக இருக்காது. ஒவ்வொரு இந்தியரைப் போன்று எனக்கும் விராட் கோலி மிகவும் விருப்பமானவர் என்று தெரிவித்தார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலியின் செல்வாக்கு இல்லாத இடங்களே இல்லை என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


