பலன்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை இந்தியாவிற்குள் ட்ரான்ஸ்ஃபர் செய்வது என்பது உங்களுடைய தற்போதைய பாலிசியை ஒரு இன்சூரரிடமிருந்து மற்றொரு இன்சூரருக்கு மாற்றுவது போலதான். உங்களுடைய தற்போதைய இன்சூரர் மீது உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் பட்சத்தில் இந்த எளிமையான செயல்முறையை நீங்கள் பயன்படுத்தி பாலிசியை ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.
உங்களுடைய பாலிசியை நீங்கள் விரும்பும் இன்சூரரிடம் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான அனுமதியை இன்சூரன்ஸ் ஒழுங்கமைப்பாளரான IRDAI வழங்குகிறது. ஒரு இன்சூரரிடமிருந்து மற்றொரு இன்சூரருக்கு மாற்றுவது மட்டுமல்லாமல் இந்த செயல் முறையை பயன்படுத்தி நீங்கள் ஒரு பிளானில் இருந்து மற்றொரு பிளானுக்கும் மாறலாம்.
உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு அதிகபட்ச பலன்களை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதற்கான உத்திரவாதத்தை இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் செயல்முறை அளிக்கிறது. எனினும் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் பாலிசியின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாக படித்து பார்ப்பது அவசியம்.
உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஒரு இன்சூரரிடமிருந்து மற்றொரு இன்சூரருக்கு மாற்றும் பொழுது நீங்கள் பெற்ற பலன்களை இழக்க தேவையில்லை.
பாலிசிதாரர்களின் உரிமைகள் :
1. எந்த ஒரு பொதுவான இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது சிறப்பு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து நீங்கள் மாற்ற விரும்பும் நிறுவனத்திற்கு உங்களது பாலிசியை நீங்கள் மாற்றலாம்.
2. இன்டிவிஜுவல் அல்லது ஃபேமிலி பாலிசிகளை மாற்றுவதற்கான அனுமதி.
3. பழைய இன்சூரரிடம் இருந்து ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்களுக்காக நீங்கள் பெற்ற காத்திருப்ப காலத்தை புதிய இன்சூரர் வழங்க வேண்டும்.
4. பழைய பாலிசியில் உங்களுக்கு வழங்கப்பட்டு வந்த உறுதியளிக்கப்பட்ட தொகையையாவது குறைந்தபட்சமாக புதிய இன்சூரர் வழங்க வேண்டும்
5. IRDA வகுத்துள்ள டைம்லைன்களுக்கு உட்பட்டு இரண்டு இன்சூரர்களும் போர்டிங் செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.
ஒழுங்குமுறைகள் மற்றும் வழிமுறைகள் :
1. ரின்யூவல் சமயத்தில் மட்டுமே உங்களால் பாலிசியை போர்டிங் செய்ய இயலும்.
2. உங்களுடைய புதிய இன்சூரன்ஸ் காலம் புதிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் துவங்கும்.
3. காத்திருப்பு காலத்தை தவிர புதிய பாலிசியின் பிற விதிகள் அனைத்தும் புதிய இன்சூரன்ஸ் நிறுவனத்தை பொருத்து அமையும்.
4. ரின்யூவலுக்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பு உங்களுடைய பாலிசியை நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை பழைய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.
5. மேலும் எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
போர்டிங் செய்வதற்கான படிகள் :
மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல ரின்யூவல் தேதிக்கு குறைந்தப்பட்சம் 45 நாட்களுக்கு முன்பு உங்களுடைய பாலிசியை நீங்கள் போர்டிங் செய்ய போகிறீர்கள் என்பதை தற்போதைய இன்சூரரிடம் தெரிவிக்க வேண்டும்.
போர்ட்டபிலிட்டி படிவத்தை பெறவும் :
உங்களுடைய தற்போதைய இன்சூரரிடமிருந்து போர்டபிலிட்டி படிவத்தை கோருங்கள்.
இதையும் படிங்க : வருமான வரி செலுத்தும் முறையில் மாற்றமா? நிதி அமைச்சகம் விளக்கம்
புதிய இன்சூரரை தொடர்பு கொள்ளவும் :
நீங்கள் மாற நினைக்கும் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும். குறிப்பிட்ட செயல்முறை மற்றும் பிளான்கள் குறித்து அவர்கள் உங்களை வழி நடத்துவார்கள்.
விண்ணப்பம் மற்றும் டாக்குமென்ட்கள் :
முறையாக நிரப்பப்பட்ட ப்ரொபோசல் படிவம் மற்றும் போர்டபிலிட்டி படிவத்தை பாலிசி ஆவணங்கள், கிளைம் வரலாறு மற்றும் KYC நிரூபணங்கள் போன்றவற்றை புதிய இன்சூரரிடம் வழங்கவும்.
புதிய இன்சூரரின் மதிப்பாய்வு :
புதிய இன்சூரர் குறிப்பிட்ட செயல்முறைகளின் அடிப்படையில் உங்களுடைய விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வார்.
பாலிசி வழங்கல் :
புதிய பாலிசி அப்ரூவாகி உங்களுக்கு வழங்கப்பட்டவுடன் ஏற்கனவே இருந்த பாலிசி முடிவடையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)