Last Updated:
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது இந்தியாவின் ரபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டிருந்தன. இதன் உண்மை தன்மை குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா கடந்த 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாம் அமைந்துள்ள தீவிரவாதிகளை குறி வைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் தொடுத்தது.
பாகிஸ்தான் ராணுவமும் சண்டையிட்ட நிலையில் இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு பாகிஸ்தான் பணிந்தது. இதன் பின்னர் சமாதான பேச்சு வார்த்தையை தொடர்ந்து நேற்று மாலை முதல் சண்டை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் ரபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில் இது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்து இருக்கிறது. இது தொடர்பாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது-
போர் ஏற்பட்டால் இழப்பு என்பது அதன் ஒரு பகுதியாக இருக்கும். கேள்வி என்னவென்றால் நாம் நம்முடைய இலக்கை அடைந்தோமா இல்லையா என்பதுதான். பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் நாம் தான் வெற்றி பெற்றோம்.
இந்த தருணத்தில் ரபேல் விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இன்னும் போரில் இருக்கிறோம்.
ஆனால் நம்முடைய அனைத்து விமானங்களும் பத்திரமாக முகாம்களுக்கு திரும்பியுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் மீது நாம் நடத்திய தாக்குதலில் சுமார் 40 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். நித்திய இராணுவம் தரப்பில் 5 பேர் வீர மரணம் அடைந்துள்ளார்கள் என்று தெரிவித்தனர்.
Fact Check : ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் ரபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? உண்மை என்ன?


