Last Updated:
Sheikh Hasina’s Awami League Party | வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி கட்சிக்கு பயங்கரவாத குற்றச்சாட்டில் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு, அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தின் பிரதமராகவும், அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தவர் ஷேக் ஹசீனா. இதற்கிடையே ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி கட்சியின் ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வெடித்தது.
இதனால் ஆட்சி கவிழ்ந்த நிலையில் பிரதமர் பதவியையும் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். மேலும், இந்தியாவுக்கு அவர் தப்பிவந்தார். இதனை தொடர்ந்து முகமது யூனிஸ் பிரதமராக பொறுப்பேற்று வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்தது.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அவாமி கட்சியின் மாணவர் அமைப்புக்கு கடந்த ஆண்டு வங்கதேச அரசு தடையும் விதித்தது.
இந்நிலையில், அவாமி கட்சிக்கு தற்போது ஒட்டுமொத்தமாக தடை விதித்து வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. அவாமி கட்சி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள வங்கதேச அரசு அக்கட்சிக்குத் தடைவிதித்துள்ளது.


