மேலும் ‘அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை ஏற்று தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி’ என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்கா தலையீடு செய்தது குறித்து காங்கிரஸ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
“சண்டை நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது.
இரு நாடுகள் பிரச்னையில் “நடுநிலை’ என்ற அமெரிக்காவின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய, நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா?.
இது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உடனே அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

