• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்’ – சசி தரூர் | Pakistan has been sending terrorists to occupy Kashmir for 30 years: Shashi Tharoor

GenevaTimes by GenevaTimes
May 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
‘காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்’ – சசி தரூர் | Pakistan has been sending terrorists to occupy Kashmir for 30 years: Shashi Tharoor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இன்னும் 30 ஆண்டுகள் முயன்றாலும் பாகிஸ்தானால் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அந்த நாட்டில் உள்ள எதையும் இந்தியா விரும்பவில்லை என்றும் அந்த நாட்டை கைவிட்டுவிடுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தியா ஒரு நிலையான சக்தி. பாகிஸ்தானிடம் உள்ள எதையும் அது விரும்பவில்லை. இந்தியா தனது பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், தனது உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், தனது இளைஞர்களுக்கு எதிர்காலத்தை வழங்குவதிலும் அது கவனம் செலுத்துகிறது.

பாகிஸ்தானை கைவிட்டதில் அது முற்றிலும் மகிழ்ச்சியடைகிறது. அதோடு, அது பாகிஸ்தானை தனிமைப்படுத்தி விட்டுவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்குடன் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். “இந்தியா வைத்திருக்கும் பகுதியை பாகிஸ்தான் உரிமை கோருகிறது. அங்கு வசிக்கும் மக்கள் பாகிஸ்தான் மக்கள் பின்பற்றும் மதத்தை பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு மதவெறி கொண்ட சக்தி அது.

ஆயிரம் வெட்டுக்களால் இந்தியாவை ரத்தம் சிந்தச் செய்து காஷ்மீரைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்திற்காக அவர்கள் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருகின்றனர். அவர்கள் அதைப் பெறப் போவதில்லை. அவர்கள் 30 ஆண்டுகளாகத் தோல்வியடைந்துள்ளனர். இன்னும் 30 ஆண்டுகளுக்கும் அவர்கள் தோல்வியடைவார்கள்.” என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் போர் புரிய இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்றும், ஆனால் அவர்கள் விரும்பினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் சசி தரூர் கூறினார். “பாகிஸ்தானுடன் போர் புரிவதில் எங்களுக்கு ஆர்வமில்லை. ஆனால் பாகிஸ்தான் போரை விரும்பினால், அவர்கள் அதைப் பெறுவார்கள். ராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் நிலையிலும், இந்தியா நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறது.” என சசி தரூர் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

தேர்தல் முடிவுகளால் தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை

Next Post

‘இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்’ – பாக். வெளியுறவு அமைச்சர் | Pakistan would consider de-escalation if India does not carry out further attacks: Foreign minister Ishaq Dar

Next Post
‘இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்’ – பாக். வெளியுறவு அமைச்சர் | Pakistan would consider de-escalation if India does not carry out further attacks: Foreign minister Ishaq Dar

‘இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்’ - பாக். வெளியுறவு அமைச்சர் | Pakistan would consider de-escalation if India does not carry out further attacks: Foreign minister Ishaq Dar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin