இரண்டு துணை போலீஸ் அதிகாரிகளுக்கு (APO) தலா S$50 லஞ்சம் வழங்கியதாக வெளிநாட்டு சுற்றுலா பயணி மீது நேற்று (மே 9) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
34 வயதுமிக்க ஹுவாங் பிங்காவோ என்ற சீன நாட்டவர், சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்தபோது இந்தக் குற்றங்களைச் செய்ததாக ஊழல் புலனாய்வு அமைப்பு (CPIB) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் லஞ்சம் வழங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு S$15,000 அபராதம்
ஆர்ச்சர்டில் புகைபிடிக்க அனுமதி இல்லாத பகுதியில் அவர் புகைபிடித்ததாகவும், இதனால் அமலாக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஹுவாங் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், S$100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஊழல் தொடர்பாக புகார் அளிக்க விரும்புவோர் CPIBயின் வலைத்தளத்தில் நேரடியாக செய்யலாம்.
சிங்கப்பூரில் நிரந்தர பாதிப்புக்குள்ளான ஊழியர்: இழப்பீடு வழங்கத் தவறிய நிறுவனத்துக்கு அபராதம்

