Last Updated:
கடந்த மே மாதம் 7ஆம் தேதி ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் ஓய்வு குறித்து பேசி வருவது ரசிகர்களை சோகமடையச்செய்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டி வரும் ஜூன் 11-ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இங்கிலாந்து லாட்ஸ் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளது.
இந்தியாவிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
அவருக்கு மட்டுமல்லாமல், மூத்த வீரரான விராட் கோலியும் எதிர்பார்த்த ரன்கள் எடுக்க தவறியதால் அவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி இதுகுறித்து பிசிசிஐயிடம் அவர் தெரிவித்திருப்பதாகவும், ஆனால் அந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் 7ஆம் தேதி ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் ஓய்வு குறித்து பேசி வருவது ரசிகர்களை சோகமடையச் செய்துள்ளது.
இந்தியாவுக்காக விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், மொத்தமாக 9,230 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 46.85 ரன்களை சராசரியாக வைத்துள்ளார்.
கொரோனாவிற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் பெரிய ஃபார்மில் இல்லை என்ற விமர்சனம் அவர் மீது எழுந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 37 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள அவர், 1,990 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


