டெல்லி மதுபானக் கொள்கை மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், கைதாகி திஹார் சிறையில் உள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 55 பேர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் ஆட்சியை நடத்த 55 எம்எல்ஏக்கள் தீர்மானமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் டெல்லி அரசின் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி பரபரப்பு புகார்களை முன்வைத்தார்.
பாஜகவுக்கு தங்களை தாவ பேரம் பேசப்பட்டதாக கூறிய அதிஷி, அடுத்தகட்டமாக ஆம் ஆத்மியில் தம்மையும், மேலும் சில முக்கிய நபர்களையும் கைது செய்ய திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் சாடினார்.
இந்த நிலையில் கெஜ்ரிவாலின் கைதுக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் என்று டெல்லி முதலமைச்சரின் மனைவி சுனிதா தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில், ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், மனீஷ் சிசோடியா, மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சட்டமேலவை உறுப்பினர் கவிதா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)