• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு : நியூஸ் நேஷன் நெட்வொர்க் மனு தள்ளுபடி

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு : நியூஸ் நேஷன் நெட்வொர்க் மனு தள்ளுபடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 09, 2025 2:45 PM IST

மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நூறு கோடி மான நஷ்ட ஈடு வழக்கில், நியூஸ் நேஷன் நெட்வொர்க் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது.

கிரிக்கெட் வீரர் தோனி வழக்குகிரிக்கெட் வீரர் தோனி வழக்கு
கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நூறு கோடி மான நஷ்ட ஈடு வழக்கில், கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்துக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014 ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். நூறு கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் தங்கள் தரப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, ஜீ தொலைக்காட்சி மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி தோனி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஜீ தொலைக்காட்சி மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜீ தொலைக்காட்சி பதிலளித்தது.

ஆனால், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு நீதிபதி நக்கீரன் முன் விசாரணைக்கு வந்த போது, தோனி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. ஆர் ராமன் ஆஜராகி, கேள்விகளுக்கு பதிலளிக்கும் படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Seven terrorists shot dead in J&K’s Samba as BSF foils infiltration 

Next Post

பெட்ரோல், டீசல், எல்பிஜி வாங்குவதில் பீதி அடையத் தேவையில்லை: ஐஓசி | No need for panic buying of fuel and LPG, says India Oil

Next Post
பெட்ரோல், டீசல், எல்பிஜி வாங்குவதில் பீதி அடையத் தேவையில்லை: ஐஓசி | No need for panic buying of fuel and LPG, says India Oil

பெட்ரோல், டீசல், எல்பிஜி வாங்குவதில் பீதி அடையத் தேவையில்லை: ஐஓசி | No need for panic buying of fuel and LPG, says India Oil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin