Foreign Worker: சிங்கப்பூரில் லஞ்சம் வழங்கிய இந்திய நாட்டவரான பன்னீர்செல்வம் ஏழுமலைக்கு S$15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம், தனது நிறுவனத்திற்கு குத்தகை ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக வேண்டி காண்டோமினிய கூட்டுரிமை மேலாளருக்கு தொடர்ச்சியான லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம்… சிங்கப்பூர் வெளியிட்ட பயண ஆலோசனை
குத்தகை ஊழல்
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் காண்டோமினிய கூட்டுரிமை வீட்டின் வாகனம் செல்லும் பாதைக்கான (driveway) தரை கற்களை (tiles) மாற்றுவதற்கான டெண்டர் என்னும் குத்தகையை பெற்றுள்ளார்.
ஆனால், டெண்டர் பணிகள் முடிந்த ஒரு வாரத்திலேயே அந்த வாகனப் பாதையில் இருந்து வண்ணப்பூச்சு உரிந்து வர தொடங்கியதாகவும், மேலும் தரையில் போடப்பட்ட கற்களிலும் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபாரதம்
இந்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்சம் தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்ட 41 வயதான அவருக்கு நேற்று (மே 8) S$15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் அவரின் தண்டனையின் போது பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படும்.
எங்கு பணிபுரிந்தார்?
இந்திய நாட்டவரான பன்னீர்செல்வம், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கும் மவுண்டெக் (Mountec) நிறுவனத்தின் இயக்குநராகவும், உரிமையாளராகவும் இருந்தார் என்பது கூடுதல் தகவல்.
மவுண்டெக்-கின் அன்றாட பணி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதும், பணிக்கான தோராயமான செலவுத் தொகையைக் குறிக்கும் எழுத்துப்பணிகளை தயாரிப்பதும் அவரின் பணியாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஊழியர் மரணம்… பணிபுரிந்த நிறுவனத்திற்கு S$240,000 அபராதம்

