• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : தரம்சாலாவில் நீடிக்கும் பதற்றம்.. வீரர்களை டெல்லி கொண்டுவர ரயிலை அனுப்புகிறது பிசிசிஐ..

GenevaTimes by GenevaTimes
May 8, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : தரம்சாலாவில் நீடிக்கும் பதற்றம்.. வீரர்களை டெல்லி கொண்டுவர ரயிலை அனுப்புகிறது பிசிசிஐ..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 08, 2025 11:35 PM IST

ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் உள்ள எல்லோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

News18News18
News18

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வீரர்களை பத்திரமாக டெல்லி கொண்டு வருவதற்கு வந்தே பாரத் ரயிலை பிசிசிஐ அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய ராணுவம் நேற்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடியை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. இன்றைக்கும் பதற்றம் நீடித்து வரும் நிலையில் எல்லையோர மாநிலங்களான ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் உள்ள எல்லோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நடந்ததாக முதலில் கூறப்பட்டாலும் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்பட்டது என தகவல்கள் வெளிவந்தன.

அதனை தொடர்ந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வீரர்கள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக ஹோட்டல் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் பாதுகாப்பான சூழலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை டெல்லி கொண்டு வருவதற்கு பிசிசிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது.

விமானம் மூலமாக வீரர்களை டெல்லிக்கு கொண்டு வருவது பாதுகாப்பானதாக இருக்காது என கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து வீரர்களை டெல்லி கொண்டு வருவதற்கு சிறப்பு வந்தே பாரத் ரயிலை பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரம்சாலாவுக்கு அருகே உனா என்ற ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து ரயில் மூலமாக வீரர்கள் டெல்லிக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று பிசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

First Published :

May 08, 2025 11:35 PM IST

Read More

Previous Post

‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!

Next Post

அமெரிக்காவை சேர்ந்தவர் முதன்முறைாக புதிய போப் ஆண்டவராக தேர்வு… யார் இவர்?

Next Post
அமெரிக்காவை சேர்ந்தவர் முதன்முறைாக புதிய போப் ஆண்டவராக தேர்வு… யார் இவர்?

அமெரிக்காவை சேர்ந்தவர் முதன்முறைாக புதிய போப் ஆண்டவராக தேர்வு... யார் இவர்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin