Last Updated:
போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தில் வெண்புகை வெளியிடப்பட்டுள்ளது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை கத்தோலிக்க கிறிஸ்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியமாக நடைபெற்றது.
இதற்காக சுமார் 250 கார்டினல்கள் உலகம் முழுவதும் இருந்து வாடிகன் நகருக்கு வந்துள்ளனர். இருப்பினும் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே போப் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக இருப்பார்கள். போப் தேர்வு செய்யப்படும் வரையில் கார்டினல்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும். புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானால் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் கிடைத்து விட்டார் என்றும் அர்த்தம்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதையடுத்து ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று 2வது முறையாக கூடிய புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போதும் கரும்புகை வெளியிடப்பட்டதால் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தேவாலய புகைபோக்கியில் இருந்து வெண்புகை வெளியேற்றப்பட்டுள்ளது. புதிய போப் தேர்வானதை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
May 08, 2025 10:27 PM IST


