Singapore-India Flights: இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot உள்ளிட்ட ஆசிய விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்தும், மாற்று வழிகளைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளன.
செவ்வாய்க்கிழமை (மே 6) முதல், அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் ஸ்கூட் விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்த்து மாற்று விமானப் பாதைகளைப் பயன்படுத்துவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக சில விமான சேவைகளின் பயண நேரம் சற்று அதிகரிக்கக்கூடும் என்று SIA செய்தித் தொடர்பாளர் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்று விமானங்களில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் SIA மற்றும் Scoot தெரிவித்துள்ளன.
விமான சேவை ரத்து
மேலும், ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதால், அமிர்தசரஸுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் Scoot விமானங்கள் நாளை வெள்ளிக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
“தெற்காசியாவின் தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்றும், மேலும் தேவை இருப்பின் விமான அட்டவணைகளை தொடர்ந்து மாற்றம் செய்யப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
Top Photo: Scoot

