Last Updated:
நேற்று கொல்கத்தா அணியுடன் பலப்பரிட்சை நடத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவது குறித்து தற்போதைக்கு எதுவும் முடிவு செய்யவில்லை என சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதாக சோபிக்கவில்லை. முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியதையடுத்து, மற்ற போட்டிகளில் எல்லாம் தோல்வியை மட்டுமே தழுவியது. இதையடுத்து லக்னோ, கொல்கத்தா அணிகளுடன் நடந்த போட்டிகளில் மட்டும் வென்று, மொத்தமாக 6 புள்ளிகளை மட்டுமே பெற்று 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
நேற்று கொல்கத்தா அணியுடன் பலப்பரிட்சை நடத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமதுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கு பிறகு பேசிய தோனி, ஆண்டிற்கு இரு மாதங்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுவதாக தெரிவித்தார்.
மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நிறைவடைய உள்ளதால், இதுபோன்ற அழுத்தத்தை எனது உடல் ஏற்றுக்கொள்ளுமா என்பதை அடுத்த 8 மாதங்களில் பார்க்க வேண்டும் என்றார். எனவே இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க முடியாது என தெரிவித்த தோனி, எங்கு சென்றாலும் தனக்கு அன்பு கிடைப்பதை உணர முடிகிறது எனக்கூறினார்.
தொடர்ந்து, தனக்கு 43 வயதாகிறது என்பதை மறக்க முடியாது என்று கூறிய தோனி, எனது கடைசி போட்டி எது என்று தெரியாததால், எனக்கு ஆதரவு தெரிவிக்கவும், நான் விளையாடுவதை பார்க்கவும் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றார்.
தற்போதைக்கு, அடுத்த ஆண்டுக்காக சென்னை அணியை தயார் செய்வதில் தான் தனது கவனம் இருப்பதாகவும் தோனி கூறினார்.
Kolkata,West Bengal


