எல்லோருக்கும் எழும் பொதுவான கேள்வி, தெரியாமல் கள்ள ரூபாய் நோட்டு வாங்கிவிட்டால், அதனை வங்கியில் மாற்ற முடியுமா?. நீங்கள் வெளிச்சந்தையில் இருந்து கள்ள நோட்டுகளை பெற்றால் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பது நல்லது. இதனால், நீங்கள் எந்த சிக்கலிலும் மாட்டாமல் இருக்க முடியும். ஆனால் உங்களால் வங்கியில் அதனை கொடுத்து அசல் நோட்டை பெற முடியாது. எனினும், நாட்டின் நலனுக்காக அதனை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியும்.


