சுபாங் ஜெயா, கார்ல்ஸ்பெர்க் பெஃரிவேரி மலேசியா பெர்ஹாட் (Carlsberg Brewery Malaysia Berhad) குழுமத்தின் 55ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 5 தீர்மானங்கள் அனைத்தும் பங்குதாரர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 2024 நிதியாண்டுக்கான இறுதி லாப ஈவாக பங்கு ஒன்றிற்கு 35 காசு வழங்குவது அடங்கும். இதன் மூலம் FY24க்கு மொத்தம் 100 சென் (1 ரிங்கிட்) பங்கு ஈவினை அறிவித்துள்ளது. இது குழுமத்தின் FY24 நிகர இலாபத்தின் 91% ஆகும்.
வணிக வலுவூட்டலுக்கான திட்டங்கள்
Accelerate SAIL என்ற நிறுவத்திய உத்தியை அடிப்படையாகக் கொண்டு, குழுமம் மலேசியா, சிங்கப்பூரில் வணிக மாற்றங்கள், போட்டிகளை எதிர்கொள்ள வலிமையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது. 200 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பியர் உற்பத்தி தொழில்நுட்ப மாற்றம் 2025 இல் நிறைவு பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் 1,393 பேர் பங்கேற்றனர். குழுமத்தின் தலைவர் டான்ஶ்ரீ டத்தோ ஶ்ரீ சோர் சீ ஹியுங், நிர்வாக இயக்குனர் ஸ்டெஃபானோ கிளினி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்நிலை இயக்குநர் கேட்டி சான் போ கேயி கையின் பணி நிறைவையும் நினைவுகூர்ந்தனர்.
2024 சாதனைகளும் எதிர்பார்ப்புகளும்
குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கிளினி கூறுகையில்: 2024 நிதியாண்டில் சிறந்த வருமானமும், சாதனையான நிகர லாபமும் பெற்றோம். இது தொழில்நுட்ப மாற்றத்துடன் premiumisation மற்றும் புதுமையை முன்வைக்கும் செயல்பாடுகளால் சாத்தியமானது என்றார்.
நிறுவனத் தகவல் வெளிப்பாடு மேம்பாடு
2024 நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த ஆண்டு அறிக்கை (IAR) மார்ச் 28, 2025 அன்று வெளியிடப்பட்டது. இது TCFD (Task Force on Climate-related Financial Disclosures) இலிருந்து IFRS S2 (Climate-related Disclosures) வழிமுறைக்கே மாற்றப்பட்ட முதல் அறிக்கையாகும். குழுமத்தின் MSCI ESG மதிப்பீடு 6.2 இலிருந்து 6.3 ஆகவும், FTSE4Good குறியீட்டில் விழுக்காட்டு நிலை 52இலிருந்து 66 ஆகவும் மேம்பட்டது.
சவால்களும் எதிர்கால திட்டங்களும்
கிளினி மேலும் கூறுகையில், “விலைவாசி உயர்வு, நாணய மாற்றம், வட்டிப் உயர்வு, அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் போன்ற உலகளாவிய சூழ்நிலைகளை நாங்கள் கவனமாக அணுகுகிறோம் என்றார். இதில் premiumisation, innovation மற்றும் digital transformation ஆகியவற்றில் மறுவிநியோகம் செய்வதன் மூலம் குழுமம் நிலைத்த வளர்ச்சியை நோக்கி நகரும்.




