ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே பர்சனல் லோனை திருப்பிச் செலுத்துவது மிகவும் அவசியம். கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை தவறவிடும் பட்சத்தில், அது உங்களுக்கு மோசமான பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் மற்றும் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும்.
சில சமயங்களில் கடன் பெறுபவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கடனை செலுத்துவதற்கு தவறலாம். இது மெடிக்கல் எமர்ஜென்சி, தொழில் நஷ்டம் அல்லது வேலை இழப்பு போன்ற எந்த சூழ்நிலை காரணமாகவும் ஏற்படலாம். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் தொடர்ந்து EMI செலுத்துவது கடன் பெற்றவருக்கு சவாலானதாக அமைகிறது.
இதனால் அதிக வட்டி விகிதம் கொண்ட பர்சனல் லோனை சமாளிப்பதற்கு இருக்கக்கூடிய ஒரே ஆப்ஷன் “லோன் செட்டில்மென்ட்” (Loan Settlement). இதன் மூலமாக கடன் வாங்கியவர்கள் கடன் வழங்குனர்களிடம் மொத்த தொகையை விட ஒரு குறைவான தொகையை செலுத்துவதற்கு பேரம் பேச வேண்டும். எனவே, இந்த செயல்முறை எவ்வாறு வேலை செய்யும் மற்றும் இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
லோன் செட்டில்மென்ட் என்றால் என்ன?
நிலுவையில் உள்ள மொத்த தொகையையும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஒரு கடன் பெற்றவரால் செலுத்த முடியாமல் போகும்போது, செலுத்த வேண்டிய தொகையைவிட குறைவான ஒரு தொகையை பெரிய அளவில் செலுத்தும் செயல்முறையே ‘லோன் செட்டில்மெண்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கடனானது ‘செட்டில்டு’ என்று அழைக்கப்படுமே தவிர, ‘குளோஸ்டு’ என்று கருதப்படாது. ஒரு லோன் மூடப்படும்போது அதற்கான வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டையுமே கடன் பெற்றவர் செலுத்தி இருப்பார். இதுவே ‘செட்டில்டு’ என்று இருக்கும் பட்சத்தில் கடன் வழங்குனர் இழப்பின் பெயரில் அந்த கடனை பெற்றுள்ளார். இது கடன் பெற்றவரின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
லோன் செட்டில்மென்ட் என்பது கடன் பெற்றவருக்கு குறுகிய கால நிவாரணத்தை அளித்தாலும், இது எதிர்மறையான நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உங்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதற்கு வேறு எந்த விதமான வழியும் இல்லை என்ற பட்சத்தில் மட்டுமே லோன் செட்டில்மென்டை தேர்வு செய்யுங்கள்.
உதாரணமாக, உங்களுடைய வேலை பறிபோனாலோ அல்லது தொழிலில் மீள முடியாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டாலோ அல்லது ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி போன்ற சூழ்நிலையில் மட்டும் லோன் செட்டில்மெண்டிற்கு செல்லுங்கள். மேலும் நீங்கள் அதிக எண்ணிக்கையில் லோன்களைப் பெற்றிருந்தாலும் மற்றும் உங்களுடைய EMI அதிக அளவில் இருந்தாலும் லோன் செட்டில்மென்டை தேர்வு செய்யலாம்.
லோன் செட்டில்மென்ட் செயல்முறை எவ்வாறு நடைபெறுகிறது?
கிரெடிட் ஸ்கோர் மீது லோன் செட்டில்மென்டின் தாக்கம்:

