முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் குறிப்பிடப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அத்துடன், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

