Last Updated:
பசு, எருமை, கன்றுக்குட்டிகள், கொல்லிமலை காளை மாடுகள், குட்டை ரக மாடுகள், பாகுபலி மாடுகள் உட்பட அனைத்து வகையான மாடுகளையும் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்லில் வாரம் ஒருமுறை நடைபெறும் மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்குவதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும் வியாபாரிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் ஆகியோர் அதிகளவில் வணிகம் செய்வதற்காக வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் காலை 5 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை மாட்டுச் சந்தை நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் மாடுகளை வாங்க வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பசு, எருமை, கன்றுக்குட்டிகள், கொல்லிமலை காளை மாடுகள், குட்டை ரக மாடுகள், பாகுபலி மாடுகள் உட்பட அனைத்து வகையான மாடுகளையும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் இறைச்சி மாடுகள் 24 ஆயிரம் ரூபாய்க்கும், கன்றுக்குட்டிகள் 10 ஆயிரம் ரூபாய்க்கும், பசு மாடுகள் 25,000 முதல் 30,000 ரூபாய்க்கும், எருமை மாடுகள் 26,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த ஒரு நாள் மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை கோடிகளில் நடைபெற்றிருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Namakkal,Tamil Nadu

