தங்கம், வெள்ளி விலை நிலவரம் 07.05.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,775-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

