• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவை வாங்கி, ஆடம்பர ரிசார்ட்டாக மாற்றிய இந்தியர்…! ஒரு இரவு தங்க எவ்வளவு தெரியுமா…?

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவை வாங்கி, ஆடம்பர ரிசார்ட்டாக மாற்றிய இந்தியர்…! ஒரு இரவு தங்க எவ்வளவு தெரியுமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


100 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள மாண்ட்வியைச் சேர்ந்த ஒரு குடும்பம், அவர்களின் ஏழ்மையான சூழலில் இந்தியப் பெருங்கடலின் குறுக்கே அமைந்துள்ள ஒரு சிறிய தீவுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது ஒரு முன்னணி வணிக நிறுவனமாக அவர்கள் உருவெடுத்துள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவரின் புதிய முயற்சி கைகொடுத்ததால், இவை அத்தனையும் சாத்தியமானது. இதற்கு காரணம் வேறு யாருமில்லை, சீஷெல்ஸ் ரெசார்ட்ஸ் தொழிலதிபர் சுனில் ஷா தான். அவர் ஒரு தீவை வாங்கி, அதை ஒரு ஆடம்பர ரிசார்ட்டாக மாற்றினார்.

கான்டே நாஸ்ட் டிராவலர், சுனில் ஷாவை மேற்கோள்காட்டி, அவரது தொழில் யோசனை குறித்து பேசுகையில், “குழந்தையாக இருந்தபோது, கலை, கட்டிடக்கலை மற்றும் இயற்கை நிலப்பரப்புகளில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. வாழ்க்கையின் எளிய இன்பங்களை அனுபவிக்க அழகான இடங்களை உருவாக்குவதில் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது மற்றும் படைப்பாற்றல் என் இரத்தத்தில் ஊறி இருப்பதையும் நான் உணர்ந்தேன். மேலும், அனைவரும் வியந்து பார்க்கும் கட்டிடக்கலை மரபை விட்டு நான் தூரமாக செல்ல விரும்பினேன்.” என கூறியுள்ளார்.

படைப்பாற்றல் தனது இரத்தத்தில் கலந்திருப்பதை சுனில் ஷா உணர்ந்ததற்கு முக்கிய காரணம், அவரது தாத்தா ஜி.எம்.பூட்டாதான், அவர் 40-கள் மற்றும் 50-களில் ஒரு கட்டிடக் கலைஞராக இருந்தார். இன்று வரை, ஐஐடி பாம்பே மற்றும் டெல்லியின் ராஜ்காட்டில் பணியாற்றியதற்காக அவர் பிரபலமாக அறியப்படுகிறார்.

தனது தந்தையின் தொழிலில் சேர்வதற்கு முன்பாக, சுனில் ஷா ஒரு பட்டயக் கணக்காளர் (CA)ஆகப் படித்தார். தற்போது, சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியாவை தளமாகக் கொண்ட ஏ.ஜே.ஷா & அசோசியேட்ஸுக்கு சுனில் ஷா தலைமை தாங்குகிறார். இது நாட்டின் முன்னணி கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றாகும். சீஷெல்ஸ் என்பது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு அழகான நாடாகும்.

சுனில் ஷா, அவரது மறைந்த தந்தையான அனந்த்-ஜீவன் ஷாவுடன் சேர்ந்து, 150 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டத்தில் ஒரு தீவை வாங்கும் புதிய திட்டத்தில் பணியாற்றத் தொடங்கினார். இது மக்களின் விருப்பமான கடற்கரைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

சுனில் ஷா, .018 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த ரவுண்ட் தீவை வாங்கியபோது, அதில் ஒரே ஒரு சிறிய உணவகம் மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது சீஷெல்ஸின் செயிண்ட் அன்னே மரைன் தேசிய பூங்காவில் அமைந்துள்ள அதிக ஆடம்பரமான என்சாண்டட் தீவு, ரிசார்ட்டின் தாயகமாக உள்ளது. மாஹே நகரத்திலிருந்து 10 நிமிட படகு சவாரியில் அங்கு செல்ல முடியும்.

தீவை மேம்படுத்த 9 மில்லியன் டாலர்களை சுனில் ஷா முதலீடு செய்தார். இந்த ரிசார்ட் கட்ட 5 ஆண்டுகள் ஆனது, துபாயை தளமாகக் கொண்ட ஹோட்டல் நடத்துநரால் இதில் 8 வில்லாக்கள் நடத்தப்படுகின்றன. ஊடக அறிக்கைகளின்படி, சுற்றுலாப் பயணிகள் 24 பேருக்கு, ஒரு தனியார் தீவு சுற்றுலாவிற்கு இங்கு ஒரு இரவுக்கு ரூ.8.5 லட்சம் செலவாகிறது.

இந்த வில்லாக்களின் விலைகள் ஒரு நபருக்கு சுமார் ரூ.45,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து விருந்தினர்கள், சீஷெல்ஸின் சுவைக்காக இந்த ஹோட்டலுக்கு வருகிறார்கள். இவர்கள் பொதுவாக ஐரோப்பா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளைச் சேர்ந்த அதிக நிகர மதிப்புள்ள நபர்கள் (HNIகள்) ஆவர். அதேபோல் சில பிரபலங்களும் இதில் அடங்குவர்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவை வாங்கி, ஆடம்பர ரிசார்ட்டாக மாற்றிய இந்தியர்…! ஒரு இரவு தங்க எவ்வளவு தெரியுமா…?

Read More

Previous Post

IPL 2025: தோனிக்கு மாற்று வீரராக இவர் இருப்பாரா? இளம் விக்கெட் கீப்பரை அணியில் இணைத்த சிஎஸ்கே

Next Post

கெசாஸ் நெடுஞ்சாலையில் வேனில் இருந்து தூக்கி எறியப்பட்டவர் ‘அது பமீலா லிங் அல்ல’ என்று போலீசார் கூறுகின்றனர் | Makkal Osai

Next Post
கெசாஸ் நெடுஞ்சாலையில் வேனில் இருந்து தூக்கி எறியப்பட்டவர் ‘அது பமீலா லிங் அல்ல’ என்று போலீசார் கூறுகின்றனர் | Makkal Osai

கெசாஸ் நெடுஞ்சாலையில் வேனில் இருந்து தூக்கி எறியப்பட்டவர் 'அது பமீலா லிங் அல்ல' என்று போலீசார் கூறுகின்றனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin