Last Updated:
கிரிக்கெட் வீரர் சிவாலிக் ஷர்மா, திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின் பெண்ணை ஏமாற்றியதாக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 2018-19 ரஞ்சி டிராபியில் பரோடா அணிக்காக விளையாடியவர்.
திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியதாக குஜராத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சிவாலிக் ஷர்மா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பரோடா அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவரான சிவாலிக் ஷர்மாவுக்கு, பெண் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. இந்நிலையில் திருமண ஆசை காட்டி தன்னுடன் சிவாலிக் ஷர்மா நெருக்கமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது வேறு வரன்கள் அவருக்குப் பார்க்கப்பட்டு வருவதாகவும் பெண் ஒருவர் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் பாலியல் ராஜஸ்தான் காவல்துறையினர் சிவலிக் ஷர்மாவை கைது செய்தனர்.
கடந்த வருடம் அப்பெண் கிரிக்கெட் வீரர் சிவாலிக் ஷர்மா மீது புகார் கொடுத்திருக்கிறார். அதில், வதோதராவுக்கு ட்ரிப் செல்லும்போது இருவரும் முதல் முறை சந்தித்ததாகவும், இதில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இருவரும் நெருங்கிப் பழகியதாகவும், ஒருநாள் சிவாலிக் ஷர்மா தனது குடும்பத்துடன் ஜோத்பூர் வந்து தனது வீட்டில் பெண் கேட்டுச் சென்றதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது என்றும், ஆனால், தற்போது திருமணம் செய்ய மறுத்து வேறு வரன் பார்த்து வருவதாகவும் புகார் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையை அடுத்து அந்தப் பெண் நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் கிரிக்கெட் வீரர் சிவாலிக் ஷர்மா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
1998ல் பரோடாவில் பிறந்த சிவாலிக் ஷர்மா, 2016-ம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். 2018-19 சீசனில் ரஞ்சி டிராபி தொடரில் பரோடா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான சிவாலிக் ஷர்மாவை ஐபிஎல் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் எனினும், எந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை. ஆனால், ஒரே சீசனில் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


