தடுப்பணையின் பயன்கள்
P.புதுப்பட்டி கிராமத்தில் குண்டாறு-தெற்காறு இணையும் இடத்தில் தடுப்பணை அமைப்பதன் மூலம், புதுப்பட்டி, பனிக்குறிப்பு, சொக்கம்பட்டி, கல்லாம்பரம்பு, முருகையாபுரம், குச்சம்பட்டி புதூர், உடையணம்பட்டி, நொச்சிகுளம், ஶ்ரீ ராமனேந்தல், வாலில்லாப்பேரி, சென்னிலைக்குடி, மயிலி, கேத்தநாயக்கன்பட்டி, கடல் பாச்சி, அம்பநேரி, சூச்சநேரி, காரேந்தல், நாடாகுளம், கொக்குளம், செம்பொன், நெருஞ்சி, நெல்லிக்குளம், ஆனைக்குளம், அன்ன லெட்சுமிபுரம் ஆகிய 23 கிராமங்களில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்தத் தடுப்பணை, விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் உதவும். இதனால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கணிசமாக மேம்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

