• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒன்றுக்கும் மேற்பட்ட பர்சனல் லோன்களை வாங்க முடியுமா…? ஒருவர் எத்தனை லோன்களுக்கு விண்ணப்பிக்கலாம்…?

GenevaTimes by GenevaTimes
May 5, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஒன்றுக்கும் மேற்பட்ட பர்சனல் லோன்களை வாங்க முடியுமா…? ஒருவர் எத்தனை லோன்களுக்கு விண்ணப்பிக்கலாம்…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆனால், ஒருவர் ஒரே சமயத்தில் எத்தனை பர்சனல் லோன்களை வாங்கலாம் என்ற பொதுவான கேள்வி எழுகிறது. இதற்கு எந்த ஒரு சட்டரீதியான கட்டுப்பாடுகளும் இல்லை என்றாலும் கூட அதிக அளவில் பர்சனல் லோன்களை வாங்குவதால் நீங்கள் தீவிரமான பொருளாதார சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

அதிக எண்ணிக்கையிலான பர்சனல் லோன்களை வாங்குவதை கடினமாக்கும் விதமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் ஒரு சில மாற்றங்களை அறிமுகம் செய்தது. அதன்படி ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை கடன் வழங்குனர்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ரெக்கார்டுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்று RBI குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையில் லோன்களை வாங்குவது சற்று கடினமாகும்.

ஒருவர் வாங்கக்கூடிய பர்சனல் லோன்களின் எண்ணிக்கைக்கு ஏதாவது லிமிட் அமைக்கப்பட்டுள்ளதா?

ஒரு தனிநபர் எத்தனை பர்சனல் லோன்களை வாங்க வேண்டும் என்பதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எந்த ஒரு கட்டுப்பாட்டையும் இதுவரை விதிக்கவில்லை. எனினும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவற்றுக்கே உரிய பாலிசிகளை கொண்டுள்ளன. இதில் ஒரே சமயத்தில் ஒரு நபருக்கு எத்தனை லோன்கள் வழங்கலாம் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு நபரின் கடனை திருப்பி செலுத்தும் திறன் அடிப்படையில் ஒருவருக்கான கூடுதல் கடன்கள் வழங்கப்படுகின்றன.

அதிக எண்ணிக்கையிலான பர்சனல் லோன்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

வட்டி விகிதம்:

கடன் வழங்குனரை பொறுத்து நீங்கள் வாங்கும் பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் என்பது மாறுபடலாம். அது மட்டுமின்றி, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் பிற பொருளாதார காரணிகளும் இதில் அடங்கும். ஆகவே அடுத்தடுத்து பர்சனல் லோன்களுக்கு விண்ணப்பிக்கும் முன்பு வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து சிறந்த ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

ப்ராசசிங் கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள்:

ப்ராசசிங் கட்டணங்கள், கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான அபராதங்கள், தாமதமாக செலுத்துவதற்கான கட்டணங்கள் போன்றவை வசூலிக்கப்படும். ஒருவேளை நீங்கள் அதிக எண்ணிக்கையிலான லோன்களை வாங்க நினைத்தால் இது மாதிரியான கூடுதல் கட்டணங்கள் குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம்.

கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம்:

நீங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசத்தை பெற்றுக் கொள்ளும்போது உங்களுடைய மாத பேமெண்ட்கள் குறையலாம். ஆனால், இதனால் நீங்கள் அதிக வட்டியை செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே, குறைவான கால அவகாசத்தை தேர்வு செய்து, அதிக EMI செலுத்தும்போது உங்களுக்கான வட்டி தொகை என்பது குறைவாக இருக்கும்.

கடன் – வருமான விகிதம்:

அதிக எண்ணிக்கையில் லோன்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக வழங்கப்படும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். வழக்கமாக கடன் பெறுபவரின் மாத வருமானத்தில் 6 முதல் 8 மடங்கு கடனை வங்கிகள் அங்கீகரிக்கும்.

கிரெடிட் ஸ்கோர்:

ஒவ்வொரு முறை உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட் சம்பந்தப்பட்ட விசாரணை நடைபெறும்போது, அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை தற்காலிகமாக குறைக்கலாம். எனவே, அதிக எண்ணிக்கையில் லோன்களை வாங்குவது உங்களுடைய ஒட்டுமொத்த கடன் சுமையை அதிகரித்து, சரியான நேரத்தில் கடனை நீங்கள் திருப்பி செலுத்துவதில் சிரமத்தை உண்டாக்கும்.

கடனுக்கான தேவை:

அதிக எண்ணிக்கையில் லோன்களை வாங்குவதற்கு முன்பு உண்மையிலேயே உங்களுக்கு அந்த லோன் தேவையா என்பதை ஒரு முறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள். அத்தியாவசியமற்ற விஷயங்களுக்காக வீணாக கடன் வாங்க வேண்டாம்.

மல்டிபிள் பர்சனல் லோன்களை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க சில டிப்ஸ்:

  • முதலில் அதிக வட்டி கொண்ட லோன்களை செலுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். இது உங்களுடைய பொருளாதார சுமையை குறைக்கும்.
  • அனைத்து கடன்களையும் ஒருங்கிணைத்து குறைந்த வட்டியில் ஒரே கடனாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
  • பேமெண்ட் தாமதமாக செலுத்துவதற்கான கட்டணங்கள் மற்றும் அபராதங்களை தவிர்ப்பதற்கு ஆட்டோமேட்டிக் பேமெண்ட்களை அமைத்துக் கொள்ளுங்கள்.
  • ஏற்கனவே நீங்கள் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் கூடுதலாக லோன் வாங்குவதை முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • மல்டிபிள் பர்சனல் லோன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இதற்கு மிக தீவிரமான பொருளாதார திட்டமிடல் தேவைப்படுகிறது.
  • தமிழ் செய்திகள்/வணிகம்/

    ஒன்றுக்கும் மேற்பட்ட பர்சனல் லோன்களை வாங்க முடியுமா…? ஒருவர் எத்தனை லோன்களுக்கு விண்ணப்பிக்கலாம்…?

    Read More

    Previous Post

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் கொல்கத்தா | kkr in must win situation to play Rajasthan Royals today match preview ipl 2025

    Next Post

    ALCATRAZ : சுறாக்கள் பாதுகாத்த உலகின் அதிபயங்கர சிறைச்சாலை..

    Next Post
    ALCATRAZ : சுறாக்கள் பாதுகாத்த உலகின் அதிபயங்கர சிறைச்சாலை..

    ALCATRAZ : சுறாக்கள் பாதுகாத்த உலகின் அதிபயங்கர சிறைச்சாலை..

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin