பொது சாலைகளில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்
2023 செப்டம்பர் 17 விபத்து காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த டிடிஎஃப் வாசன் ஸ்டண்ட் செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார். இதில் அவர் பைக் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு, அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்தார். இந்த விபத்து சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, செப்டம்பர் 19 அன்று, பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 279 (பொது சாலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்), 336 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்), 308 (கொலைக்கு முயற்சி), மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicles Act) பிரிவு 184 (ஆபத்தான வாகன ஓட்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விபத்தில் வாசன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

