திமுக மீது விமர்சனம்
திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் குற்றம்சாட்டிய ஈபிஎஸ், கஞ்சா போதை கும்பலால் வணிகர்கள் தாக்கப்படுவதையும், ஆளுங்கட்சியினரால் “மாமூல்” வசூலிக்கப்படுவதையும், பூட்டிய கடைகளில் கொள்ளையடிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். “திமுக ஆட்சி வணிகர்களுக்கு எதிரானது. சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளன,” என்றார். மேலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக திமுக வாக்களித்ததை வணிகர் சமூகம் மறக்காது என விமர்சித்தார்.

