4D Draw: சிங்கப்பூரில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) ஒட்டுமொத்தமாக 65.57 சதவீத வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அது 61.23 சதவீத வாக்குகளை பெற்றது. அதாவது கிட்டத்தட்ட 4 சதவீத வாக்குகளை தற்போது PAP அதிகம் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 4, 2025) நடந்த 4D லாட்டரியில் 6557 என்ற எண் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
மக்கள் செயல் கட்சி 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்றதால், 8710 என்ற மற்றொரு 4D எண்ணும் விற்றுத் தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் தலா ₹42 கோடி ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்
இது ஒன்றும் புதிதானது அல்ல. சிங்கப்பூரில் அவ்வப்போது நடக்கும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தேதிகள், எண்கள், முடிவுகள் லாட்டரி எண்களாக வாங்கப்படும்.
இந்த முறை, பொதுத் தேர்தலில் 65.57 சதவீத வாக்குகளுடன் PAP அபார வெற்றிபெற்றதை அடுத்து, அதுவே அதிஷ்ட எண்களாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Photo: Singapore Pools/app

