சிங்கப்பூரில் இரவு விடுதிகளை நடத்தியதாக நான்கு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் மீது நாளை செவ்வாய்க்கிழமை (மே 6) குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
மற்றவர்களை ஏமாற்றி மோசடி செய்தது, உரிமம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கியது போன்ற பிற குற்றங்களிலும் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்படும்.
GE2025: மக்கள் செயல் கட்சி (PAP) அபார வெற்றி: 66 ஆண்டுகள்… தொடர்ந்து 14 முறை ஆட்சியில்!
குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 21, அன்று ஏர்போர்ட் பொலிவார்ட், கேலாங் சாலை, டோவர் சாலை, ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, மின்பூ சாலை, அப்பர் செராங்கூன் சாலை மற்றும் அப்பர் தாம்சன் சாலை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது 17 பேர் கைது செய்யப்பட்டனர், சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் சந்தேகிக்கப்படுகின்றனர்.

மேலும் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளில் 45 முதல் 61 வயதுக்குட்பட்ட இரண்டு ஆடவர்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம் மொத்தமாக 20 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது சுமார் S$6,100 க்கும் அதிகமான ரொக்கம், கைபேசிகள், போதைப்பொருள் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் 36 முதல் 61 வயதுக்குட்பட்ட ஐந்து பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
Singapore Pools டோட்டோ கடையை மூட முடியுமா? PAP-க்கு சவால் விட்ட வேட்பாளர்

