Last Updated:
Fish Price: மீன்பிடித் தடைக்காலத்தால் மீன் வரத்து குறைந்து உள்ள நிலையில் மீன்களின் விலை விறுவிறுவென அதிகரித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் மீன் பிடிப்பதற்கு தடைக் காலம் தற்போது நடைமுறையில் உள்ளது. கடலில் வாழும் மீன்களின் இனப்பெருக்கம் இந்த காலத்தில் நடைபெறும் என்பதால் எந்த மீன்பிடி தடைக் காலம் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடைக் காலத்தால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலையும் இருமடங்கு வரை உயர்ந்து காணப்படுகிறது. மீன் வியாபாரம் குறித்து மீன் மார்க்கெட் அசோசியேஷன் சங்கத்தின் செயலாளர் ஜாஃபர் அலி கூறுகையில், “தலைமுறைகளாக நாங்கள் இந்த தொழிலைச் செய்து வருகிறோம்.
வருடத்தில் ஒரு முறை இனப்பெருக்கத்திற்காக 60 நாள் தமிழகம் முழுவதும் மீன்களுக்குத் தடைக் காலம் வரும். இந்த தடைக் காலம் கடந்த வாரத்திலிருந்து தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதன் விளைவாக மீனின் வரத்து குறைந்து உள்ளதால் மீன்களின் விலை அதிகரித்து உள்ளது.
700, 800 ரூபாய்க்கு விற்பனை ஆன வஞ்சரம் மீன் தற்போது 1,400 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. அந்த அளவிற்கு மீனின் விலை அதிகரித்து உள்ளது. மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுவதால் வழக்கமாக வரும் பொதுமக்கள் வரத்து இல்லை. இதனால் வியாபாரம் பெரிதாக இல்லை.
தினமும் ஹோட்டல், கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்பதால் அதிக லாபம் இன்றி கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Coimbatore,Tamil Nadu
May 04, 2025 11:41 AM IST
Fish Price: மீன் விலை டபுளாக உயர்ந்ததால் மீன் பிரியர்கள் ஷாக்… தடைக்காலத்தால் குறைந்த மீன் வரத்து…

