போர் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் அரசு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாடுடன் பேசிவருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஐ.நா. தலைவருடனும், சில சமயங்களில் சீனாவின் ஜி ஜின்பிங்குடனும் பேசுகிறார். சில நேரங்களில் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்கிறார். சில சமயங்களில் ரஷ்யாவிடம் முறையிடுகிறார். பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் வரை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர், தொலைப்பேசி வாயிலாக மலேஷியா வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசியிருக்கிறார். உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்படி பாகிஸ்தான் பதட்டமாக இயங்கிவரும் சூழலில் கடந்த 10 நாளில் பாகிஸ்தான் என்ன செய்தது என்று பார்ப்போம்:
எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: கடந்த 10 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகிறது.
அணு ஏவுகணை சோதனை: திடீரென அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஒரு ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
கடற்படை துப்பாக்கிச் சூடு பயிற்சி: பாகிஸ்தான் கடற்படை எந்த நேரத்திலும் தாக்கத் தயாராக உள்ளது என காட்டும் வகையில், அந்நாட்டு கடற்படை அரபிக் கடலில் துப்பாக்கிச் சூடு பயிற்சியை மேற்கொண்டது.
வான்வெளி மூடல்: பாகிஸ்தான் தனது வான்வெளிகளை ஒன்றன் பின் ஒன்றாக மூடியுள்ளது. ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் இராணுவம் இருக்கும் பகுதிகளில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் உள்ளது. கடல் பகுதியில் ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து பெறப்பட்ட SH-15: சீனாவில் இருந்து வாங்கப்பட்ட மொபைல் பீரங்கி அமைப்புகளான SH-15 ரக ஆயுதங்களை எல்லை பகுதியில் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.
நடுத்தர பீரங்கித் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல்: இந்திய இராணுவத்தின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் மிகவும் அஞ்சுகிறது. அதனால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கூடுதல் நடுத்தர தூர பீரங்கித் துப்பாக்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
டார்பிடோ சோதனை: கடற்படை வழியாக தாக்குதல் நடைபெற அதிக வாய்ப்பு இருக்கும் எனும் அச்சம் பாகிஸ்தான், டார்பிடோ ரக ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் வான் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது: தலைநகர் இஸ்லாமாபாத் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாகிஸ்தான் நம்புகிறது. எனவே அங்கு வான் பாதுகாப்பு அமைப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து போர் விமானங்கள் சுற்றி வருகின்றன.
குவிக்கப்படும் ராணுவ வீரர்கள்: நிலைமை மிகவும் பயங்கரமாக இருப்பதால், பாகிஸ்தான் தனது இராணுவத்தை அதிகளவில் எல்லைப் பகுதியை நோக்கி நகர்த்திவருகிறது.
குவிக்கப்பட்டுள்ள போர்க் கப்பல்கள்: பாகிஸ்தான் கடற்படைப் போர்க் கப்பல்கள் ஓர்மாரா துறைமுகத்தில் (பலுசிஸ்தானில்) நிறுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் பகிரங்க எச்சரிக்கை… 10 நாளாக பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

