Last Updated:
போப் தோற்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ள புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
போப் தோற்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கும் AI படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் தேதி காலமானார். உலக நாடுகளின் தலைவர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு போப் பிரான்ஸிஸ் உடல் கடந்த 26 ஆம் தேதி வாடிகனில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுமார் 12 ஆண்டுகள் போப் ஆண்டவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கான பணிகளை வாடிகன் தொடங்கியுள்ளது. விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அடுத்த போப்-ஆக விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்ப் இவ்வாறு பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், போப் ஆண்டவர் தோற்றத்தில் டிரம்ப் இருப்பது போன்ற புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் அதிகாராப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை டிரம்ப்பும் மறு பகிர்வு செய்துள்ளார்.


