டேன் பிரியசாத் கொலை சம்பவத்தில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (3) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.R

