ஜோகூர்பாரு:
ஜோகூர் பாருவில் உள்ள MRSM கல்லூரியைச் சேர்ந்த 16 மாணவர்கள் உணவு நஞ்சானாதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் MRSM கல்லூரியில் இருந்து இந்த சம்பவம் குறித்த தகவலை தாங்கள் பெற்றதாக மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மொத்தம் 16 மாணவர்கள் பல அரசு , தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
ஜோகூர் பாரு மாவட்ட சுகாதார அலுவலகத்தின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு, விசாரணை நடத்த MRSM சென்றுள்ளது என்று அவர் சொன்னார்


