• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2-ம் எண் அறை, சலுகைகள்… – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு | Arvind Kejriwal sent to jail for 14 days, will be kept in Tihar Prison number 2

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
2-ம் எண் அறை, சலுகைகள்… – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு | Arvind Kejriwal sent to jail for 14 days, will be kept in Tihar Prison number 2
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசு மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பின்னர் மார்ச் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏப்ரல் 1-ஆம் தேதி (இன்று) வரை அமலாக்கத் துறை காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 1) அவர் மீண்டும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பை கோரவில்லை. ஆனால் “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் கடவுச் சொற்களைத் தர மறுக்கிறார். ஆகையால் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனயைடுத்து கேஜ்ரிவாலை வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அரவிந்த் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் அவருக்கு 2-ம் எண் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்படுவதற்காக அவரை அழைத்துவரும்போது சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி தொண்டர்கள் கூடியிருந்தனர். அவர்கள் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

முன்னதாக, பகவத் கீதை, ராமாயணம் மற்றும் நீரஜா சவுத்ரி எழுதிய “How Prime Minister Decided” ஆகிய புத்தகங்களை சிறைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் என்று கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதற்கு அவருக்கு நீதிமன்றம் அனுமதியும் அளித்தது. இதற்கிடையே, அவருக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன் விவரம்:

  • மெத்தையுடன் கூடிய படுக்கை.
  • காலை 6:30 மணிக்கு ஒரு ‘டீ’.
  • சிறையில் அவரின் அறைக்கதவு சூரிய உதயத்துக்குப் பின்னர் திறந்துவிடப்படும்.
  • உணவு நேரம்: 10:30 முதல் 11 மணி வரை
  • பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சிறைக்கதவு மூடப்படும்.
  • மாலை 3:30 மணிக்கு டீ, இரண்டு பிஸ்கட்.
  • மீண்டும் சூரிய மறைவுக்கு பின்னர் சிறைக்கதவு மூடப்படும்.
  • மருத்துவர்கள் அனுமதித்துள்ள மருந்துகள் உடன் சிறப்பு உணவு.
  • ஒரு மேஜை, நாற்காலி உடன் கேஜ்ரிவால் தற்போது அணிந்துள்ள மத குறியீடு கொண்ட சங்கிலி வைத்தக்கொள்ளவும் சலுகை.


இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மக்களவைத் தேர்தல் முடியும் வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையில் வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம் என்று குற்றம்சாட்டினார். அதன் விவரம்: “கேஜ்ரிவாலை தேர்தல் முடியும் வரை சிறையில் வைப்பதே பாஜகவின் திட்டம்” – சுனிதா

இதே மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திரா ஜெயின் ஆகியோரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகன் கவிதாவும் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

தமிழர் தலைநகரில் கை,கால்கள் கட்டப்பட்டு கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

Next Post

RR vs MI Result: எனது விக்கெட்டு தான் திருப்புமுனை – பாண்ட்யா புலம்பல்! ஹாட்ரிக் வெற்றியுடன் டாப்பில் ராஜஸ்தான்

Next Post
RR vs MI Result: எனது விக்கெட்டு தான் திருப்புமுனை – பாண்ட்யா புலம்பல்! ஹாட்ரிக் வெற்றியுடன் டாப்பில் ராஜஸ்தான்

RR vs MI Result: எனது விக்கெட்டு தான் திருப்புமுனை - பாண்ட்யா புலம்பல்! ஹாட்ரிக் வெற்றியுடன் டாப்பில் ராஜஸ்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin