திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் உயிரிழந்து மிதந்த நிலையில் இன்று(01) திங்கட்கிழமை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டர் மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் (வயது 39) என தெரியவருகின்றது.
கை,கால்கள் கட்டப்பட்டு வயிற்றில் மண் மூடையும்
சடலமாக மீட்கப்பட்டவரின் கை,கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வயிற்றில் மண் மூடையும் கட்டப்பட்டுள்ளது.இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக
இதனையடுத்து மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று பகல் குறித்த இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

