Last Updated:
சிலி மற்றும் அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
சிலி மற்றும் அர்ஜென்டினாவில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான சிலி மற்றும் அர்ஜென்டினா பகுதியில் மாகெல்லன் பகுதியை ஒட்டிய கடலில் ரிக்டர் அளவில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இதையடுத்து சிலியின் மாகெல்லன் கடற்கரை பகுதியில் இருந்து மக்கள் விரைந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். மக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றதால் பரபரப்பு நிலவியது. நல்வாய்ப்பாக சுனாமி அலைகள் எதுவும் எழாததால், சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசு படிப்படியாக வாபஸ் பெற்றது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


