சிங்கப்பூரில் வாடகை காரை திருப்பித் தராமல் ஏமாற்றிய 29 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கார் வாடகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இந்த சந்தேக நபர் வாடகை காரை திருப்பித் தராமல் ஏமாற்றியதை கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிற்பகல் 1.05 மணிஅளவில் காவல்துறையினருக்கு அவர்கள் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த நபர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

