• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைவு.. எவ்வளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைவு.. எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக  சிலிண்டரின் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. சர்வதேச விலை நிலவரத்துக்குத் தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் விலையை மாதத்தின் முதல் நாளில் மாற்றி வருகின்றன.

இந்த நிலையில் 19 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் கடந்த மாதம் 1960 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. இந்த விலை தற்போது 30 ரூபாய் 50 காசுகள் குறைந்து 1930 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக சில நாட்களுக்கு முன்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை தலா 100 ரூபாய் குறைப்பதாக கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார்.  மகளிர் தின பரிசாகவும் இது இருக்கும் என்று  பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

விளம்பரம்

Today, on Women’s Day, our Government has decided to reduce LPG cylinder prices by Rs. 100. This will significantly ease the financial burden on millions of households across the country, especially benefiting our Nari Shakti.

By making cooking gas more affordable, we also aim…

— Narendra Modi (@narendramodi) March 8, 2024

விளம்பரம்

இந்த நிலையில் குறைக்கப்பட்டட விலை கடந்த மாதமே அமலுக்கு வந்தது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை  818 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் நாளான இன்று குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த மாதம் தான் குறைக்கப்பட்டது என்பதால் அதன் விலை மீண்டும் குறைக்கப்படவில்லை. பழைய விலையான 818 ரூபாய் 50 காசுகள் என்ற அளவிலேயே சென்னையில் சிலிண்டரின் விலை விற்கப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மேலும் குறைந்திருப்பது வணிகர்கள் குறிப்பாக தேநீர் கடைக்காரர்கள் மற்றும் அடுமனை வைத்திருப்போருக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்திருக்கிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் தவித்து வந்த மக்கள் மேலும் சிலிண்டர் விலை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Read More

Previous Post

MI vs RR | மும்பைக்கு 3வது தோல்வி – வான்கடேவில் ராஜஸ்தான் வெற்றி | third defeat for Mumbai indians Rajasthan royals won Wankhede

Next Post

இரு மோட்டார் சைக்கிள் மோதல் : இரண்டு பள்ளி மாணவர்கள் பலி | Makkal Osai

Next Post
இரு மோட்டார் சைக்கிள் மோதல் : இரண்டு பள்ளி மாணவர்கள் பலி | Makkal Osai

இரு மோட்டார் சைக்கிள் மோதல் : இரண்டு பள்ளி மாணவர்கள் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin