Last Updated:
ஷிகர் தவான், ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனுடன் காதலில் இருப்பதை இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இதனால் அவர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அவரது நிலை கண்டு வேதனை அடைந்தனர். ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
ஷிகர் தவான் – ஆயிஷா முகர்ஜி தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், நாளடைவில் இந்தத் தம்பதிக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட இவர்களுக்கு விவாகரத்தானது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஷிகர் தவான் தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார். இதனை அவரே உறுதியும் செய்துள்ளார்.
நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு படம் படு வைரலானது. அந்தப் படத்தில் அவர், ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைன் எனும் பெண்ணுடன் அவர் இருக்கிறார். இந்தப் படத்தை பகிர்ந்துள்ள ஷிகர் தவான், “என் காதல்” என பதிவு செய்துள்ளார். மேலும், அந்தப் பதிவில் அவர், “நான் காதலில் துரதிர்ஷ்டசாலி என்று சொல்லமாட்டேன் – மாறாக, என் தேர்வுகள் அனுபவமின்மையால் வந்தவை. ஆனால் இப்போது, எனக்கு அனுபவம் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைன், தற்போது அபுதாபியில் உள்ள ‘நார்த்தன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்’ எனும் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். கடந்த சில காலமாகவே ஷிகர் தவானும், சோஃபி ஷைனும் சில நிகழ்வுகளில் இணைந்து பங்கேற்றிருந்தனர்.
ஷிகர் தவான், துபாய் நாட்டில் விளையாடுவதற்காக சென்றபோது, முதன்முதலில் சோஃபி ஷைனை சந்தித்ததாகவும், அதில் இருந்து இருவரும் பழகி, பின் அது காதலாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.


