• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றிய கொடூரம்.. பெண்ணின் துணிச்சலுக்கு நேர்ந்த சோகம்!

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றிய கொடூரம்.. பெண்ணின் துணிச்சலுக்கு நேர்ந்த சோகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 02, 2025 12:51 PM IST

உக்ரைனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா ரஷ்ய ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

ரஷ்ய ராணுவக் காவலில் விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றி பெண் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விக்டோரியா ரோஷ்சினா என்ற 27 வயதான பெண் பத்திரிகையாளர் உக்ரைனில் வெளியாகும் செய்தித்தாளான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுக்காக பணிபுரிந்து வந்தார். ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் உக்ரேனியர்கள் சந்திக்கும் துயரங்களை செய்திகளாக வழங்குவதை ரோஷ்சினா வழக்கமாக கொண்டிருந்தார். மிகவும் துணிச்சலான செய்தியாளரான ரோஷ்சினா, 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார். அப்போது ரோஷ்சினா திடீரென காணாமல் போனார்.

இதையடுத்து, ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ரோஷ்சினா, மெலிடோபோல் என்ற சித்ரவதை கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறையால் நிர்வகிக்கப்படும் மெலிடோபோல் சித்ரவதை கூடத்தில் ரோஷ்சினா, கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிகிறது. ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 757 உக்ரைன் வீரர்களின் உடல்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்படைக்கப்பட்டன. இதில், உடல் எண் 757, அடையாளம் தெரியாத ஆணின் உடல் என கூறி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த உடல் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தான், அது ரோஷ்சினா உடல் என கண்டுபிடிக்கப்பட்டது.

ரோஷ்சினாவின் உடலில் கீறல்கள், உடைந்த விலா எலும்புகள், கழுத்தில் ஆழமான காயங்கள் மற்றும் கால்களில் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. மேலும் மூளை, கண்கள் மற்றும் மூச்சுக் குழாய் ஆகியவை அகற்றப்பட்ட கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. பல மாதங்கள் ரோஷ்சினாவிற்கு உணவு வழங்கப்படவில்லை என்றும், அவர் வெறும் 30 கிலோ எடையைத் தான் கொண்டிருந்ததாகவும் அவருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகளும் கூறியுள்ளனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை அரங்கேற்றிய ரஷ்ய ராணுவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போர் குற்ற சட்டத்தின் கீழ் உக்ரைன் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விக்டோரியா ரோஷ்சினாவின் புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றி பெண் பத்திரிகையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

First Published :

May 02, 2025 12:51 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றிய கொடூரம்.. பெண்ணின் துணிச்சலுக்கு நேர்ந்த சோகம்!

Read More

Previous Post

‘19-வது ஓவரால் ஆட்டம் போச்சு…’ – சிஎஸ்கே கேப்டன் தோனி | lost the game because of 19th over says csk captain ms dhoni

Next Post

Indeks Kebebasan Media Dunia 2025 Malaysia kini di kedudukan ke-88 | Makkal Osai

Next Post
Indeks Kebebasan Media Dunia 2025 Malaysia kini di kedudukan ke-88 | Makkal Osai

Indeks Kebebasan Media Dunia 2025 Malaysia kini di kedudukan ke-88 | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin