சிங்கப்பூர் டோட்டோ (TOTO), 4D லாட்டரிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற மோகம் சிங்கப்பூரர்களுக்கு மிகவும் அதிகம்.
ஒவ்வொரு லாட்டரி முடிவிலும் வெற்றி பெற்ற டிக்கெட் எந்த சிங்கப்பூர் பூல்ஸ் கிளையில் வாங்கப்பட்டது என்பதை அவர்கள் அதிகம் கவனிப்பார்கள்.
சிங்கப்பூரில் 23 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்: சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட உடல்
அந்த வகையில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இரண்டு பிரம்மாண்ட வெற்றிகளை கொண்ட குறிப்பிட்ட ஒரு சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் மட்டும் சிங்கப்பூரர்களின் கவனம் அதிகம் இருந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 27 அன்று, புக்கிட் மேராவில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் வாங்கப்பட்ட டிக்கெட் சுமார் S$5.5 மில்லியன் என்ற பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளது.
ஏப்ரல் 27 அன்று, வெற்றி பெற்ற எண்கள் 4, 9, 30, 32, 40 மற்றும் 49 ஆகும், கூடுதல் எண் 16 ஆகும்.

அதே போல 2023 ஜனவரியில், அதிர்ஷ்டசாலி ஒருவர் அதே கடையில் வாங்கிய டிக்கெட் மூலம் சுமார் $120,000 பரிசை வென்றார்.
கடந்த ஆண்டு மட்டும், பிளாக் 124 புக்கிட் மேரா லேன் 1 இல் அமைந்துள்ள அந்த ஹுவாட் கடையில் ( huat) இருந்து S$77,000 முதல் S$120,000 வரையிலான பரிசுத் தொகையை ஆறு அதிர்ஷ்டசாலி நபர்கள் வென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இங்கு டிக்கெட் அதிகம் வாங்கப்படுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 27 அன்று நடந்த பிரம்மாண்ட டோட்டோ குலுக்கலில் இருவர் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் சென்றனர். முழு விவரம் கீழே:

