Last Updated:
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் மட்டுமின்றி அரு பள்ளத்தாக்கு, பீடாப் பள்ளத்தாக்கு மற்றும் பொழுதுபோக்கு பூங்காவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் மட்டுமின்றி மேலும் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
அரு பள்ளத்தாக்கு, பீடாப் பள்ளத்தாக்கு மற்றும் பொழுதுபோக்கு பூங்காவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அங்கு பாதுகாப்பு கெடுபிடி இருந்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பஹல்காமில் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததாகவும், அவர்களுக்கு 20 பேர் உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இதுவரை 186 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்காமில், தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர் சதாநந்த டேட், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


