Last Updated:
மனிதகுல விரோதிகளுக்கு எதிரான இந்த போரில் இந்தியாவில் உள்ள 145 கோடி மக்களின் முழு ஆதரவும் பிரதமர் மோடிக்கு உள்ளது
இந்திய ஊடகம் மற்றும பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்ற உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) 2025 மே 1 ஆம் தேதி தொடங்கி மே 4 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவான இன்று முகேஷ் அம்பானி பங்கேற்று பேசியதாவது-
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இங்கே வந்துள்ளார். அவரது வருகை எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாகும். சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் ஒரு பிரதமருக்கு எவ்வளவு பொறுப்புகள் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
மனிதகுல விரோதிகளுக்கு எதிரான இந்த போரில் இந்தியாவில் உள்ள 145 கோடி மக்களின் முழு ஆதரவும் பிரதமர் மோடிக்கு உள்ளது. இந்தியாவின் எதிரிகள் நிச்சயம் தோல்வியடைவார்கள். இங்கு கூடியிருக்கும் அனைவரின் சார்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில் பிரதமர் மோடிக்கு நாங்கள் துணை நிற்கிறோம். இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் மதிப்பு இன்றைக்கு 28 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்த மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ”பெகல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்த மாநாடு ஒத்திவைக்கப்படலாம் என்று பலர் என்னிடம் கூறினார்கள். ஆனால் எத்தகைய சவாலை எதிர்கொள்ளக்கூடிய நபராக பிரதமர் மோடி உள்ளார். அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
‘இந்திய ஊடகம் – பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும்’ – முகேஷ் அம்பானி நம்பிக்கை


