Last Updated:
கடந்த போட்டியில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்சி இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
‘ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் விறு விறுவென உயரத் தொடங்கியது.
குறிப்பாக ரிக்கல்டன் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி ரன்கள் சேர்த்தார். 38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா அரைசதம் கடந்து 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா இணை ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி ரன்கள் சேர்த்தது. இருவரும் தலா 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்களை குவித்தது.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்சி இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் வெளியேறினார். நிதிஷ் ராணா 9 ரன்களும், கேப்டன் ரியான் பராக் 16 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
துரு ஜுரல் 11 ரன்கள் எடுத்தார். சுபம் தூபே 15 ரன்கள், மதிஷ் தீக்ஷனா, குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 2 ரன்கள் எடுத்தனர். ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக 30 ரன்கள் சேர்த்தார்.
16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 14 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
May 01, 2025 11:20 PM IST


