Last Updated:
கடுமையான வெப்பம் மற்றும் கனமான ஆடை ஆகியவற்றின் காரணமாக மாரத்தான் ஓடுவது கடினமாக இருந்தாலும், பந்தயத்தை முடித்ததில் தான் பெருமைப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் இரத்த புற்றுநோயால் உயிரிழந்த பிறகு, திருமண ஆடையை அணிந்து லண்டன் மாரத்தானை முடித்தார். லாரா கோல்மன்-டே தனது மறைந்த கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 12 மாதங்களில் 13 மாரத்தான் ஓட்டங்களை நடத்தும் சவாலை ஏற்றுக்கொண்டதாக பிபிசி தெரிவித்துள்ளது. இரத்த புற்றுநோய் ஆராய்ச்சி தொண்டு நிறுவனத்திற்கான நிதி திரட்டலின் ஒரு பகுதியாக, அவரது திருமண நாளில், மாரத்தானின் கடைசி மூன்று மைல்களை திருமண ஆடையை அணிந்து கொண்டு ஓட லாரா கோல்மன் முடிவு செய்தார்.
23 மைல்கள் ஓடிய லாரா, இன்னும் மூன்று மைல்கள் மீதமுள்ள நிலையில், தனது திருமண ஆடையை மாற்றினார். பின்னர் அவர் திருமண வேடத்தில் ஓடி போட்டியை முடித்தார். இந்த திருமண ஆடையை அணிந்து கொண்டு ஓடுவது மிகவும் கடினமாக இருந்தபோதிலும், அதை தனது கணவருக்காக அணிந்து கொண்டு ஓடியதாக லாரா கூறுகிறார். கடுமையான வெப்பம் மற்றும் கனமான ஆடை ஆகியவற்றின் காரணமாக மாரத்தான் ஓடுவது கடினமாக இருந்தாலும், பந்தயத்தை முடித்ததில் தான் பெருமைப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
லாராவின் கணவர் சாண்டர், இரத்தத்தையும், எலும்பு மஜ்ஜையையும் பாதிக்கும் அரிய வகை லுகேமியாவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நிலை இன்னும் மோசமடைந்து கடந்த வருடம் இறந்துவிட்டார். பின்னர் லாரா தனது கணவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், இரத்த புற்றுநோய் ஆராய்ச்சி தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதற்காகவும் மாரத்தானில் பங்கேற்றார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 51 வயதான லாரா 12 மாதங்களில் 13 மாரத்தான்களில் பங்கேற்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தங்கள் காதல் மற்றும் தனிப்பட்ட கதைகளுடன் கமெண்ட் பக்கத்தில் குவிந்தனர். அதில் ஒரு யூசர், என் கணவர் 2019 ஆம் ஆண்டில் 1/2 மாரத்தானின் இறுதிக் கோட்டிற்கு அருகில் செல்லும்போது இறந்துவிட்டார், கடந்த ஆண்டு அவரது 5 ஆம் ஆண்டு நினைவு விழாவில் அவர் செல்ல முடியாத மாரத்தான் பந்தயத்தை நான் முடித்தேன்.
அடுத்த ஆண்டு நானும் என் திருமண உடையில் மாரத்தான் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், இந்த கதை கண்ணீர் வர வைக்குது! சபாஷ் லாரா, என்று கூறியுள்ளார். இன்னொரு நபர், என்ன ஒரு அற்புதமான பெண்மணி, என்று கருத்து தெரிவித்தார். இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்த புற்றுநோயால் உயிரிழந்த தனது 30 வயது தோழியின் நினைவாக, அவரது தோழி கேட் வால்ஃபோர்டும் மாரத்தானில் ஓடினார்.
புற்றுநோயால் உயிரிழந்த கணவன்.. மராத்தானில் வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய மனைவி.. நெகிழ்ச்சி சம்பவம்!


