தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழிக்கான பண்ணைக் கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பி.சி.சி.) சார்பில், தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.95 வரை செலவாகிறது. வருகிற 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிக்குத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க அரசியல் கட்டிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் பொதுமக்களிடம் வாக்குகளைச் சேகரிக்கக் கடந்த 3 நாட்களாகத் தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வீடுவீடாக சென்று பொதுமக்களைச் சந்தித்து,பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு வாக்கு சேகரிக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், கட்சி பொறுப்பாளர்களும் உற்சாகத்துடன் களப்பணியாற்ற ஆங்காங்கே சுடச்சுட, கமகம என சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகக் கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன்படி 24 ஆம் தேதி ரூ.111 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) 27ஆம் தேதி ரூ.120, 28ஆம் தேதி ரூ.125, 29ஆம் தேதி ரூ.130 எனத் தொடர்ந்து விலை உயர்ந்தபடி உள்ளது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 5 நாட்களில் கிலோவிற்கு ரூ.19 அதிகரித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இறைச்சிக் கடைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.210 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.260 முதல் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் இந்த விலை மாறுபடுகிறது. தேர்தல் காரணமாகக் கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)