Last Updated:
நடப்பாண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 118.10 டன்களாக குறைந்துள்ளது.
நடப்பாண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 118.10 டன்னாக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சர்வதேச நிலவரம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் வலை உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், தங்கத்தின் விலை தற்போது குறைய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 118.10 டன்களாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நடப்பாண்டு மட்டும் தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், 139 டன்களாக இருந்த தங்கத்தின் தேவை, நடப்பாண்டு இதே காலத்தில் 118.10 டன்களாக குறைந்து, 15 சதவீதம் சரிவை கண்டுள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 94 ஆயிரத்து 30 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த காலாண்டில் தங்கம் விலை 10 கிராமுக்கு 79 ஆயிரத்து 633 ஆக இருந்தது. இந்நிலையில், தங்கத்தின் விலை உயர்வால் அவற்றை வாங்குவதும் குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், உலக அளவிலான தங்கத்தின் தேவை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.


