உதாரணமாக Google Pay ஸ்மார்ட்ஃபோன்களில் இருந்து தங்களுடைய யூசர்களுக்கு நேரடியாக கடன்களை வழங்குகிறது. இதன் மூலமாக கடன் செயல்முறை விரைவாகவும், மிகவும் சௌகரியமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
Google Pay என்றால் என்ன?:
Google Pay என்பது ஒரு டிஜிட்டல் வாலெட் மற்றும் இது ஒரு ஆன்லைன் பேமெண்ட் சிஸ்டம். கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி யூஸர்கள் பேமெண்ட்கள் செலுத்துவது, பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்வது போன்ற அனைத்து விதமான பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களை தங்களது ஸ்மார்ட் போன்கள் மூலமாகவே செய்யலாம். Google Pay அதன் சேவைகளை விரிவாக்கும் பொருட்டு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பர்சனல் லோன்களை வழங்கி வருகிறது. இந்த கடன்களை நாம் Google Pay அப்ளிகேஷன் மூலமாகவே பெறலாம்.
Google pay மூலமாக பர்சனல் லோன்கள்: அம்சங்கள்
ஆன்லைன் விண்ணப்பம்:
இந்த ஒட்டுமொத்த விண்ணப்ப செயல்முறையும் Google Pay அப்ளிகேஷன் மூலமாகவே நடைபெறுகிறது.
உடனடி அப்ரூவல்:
கடன் வழங்குனரை பொறுத்து உங்களுடைய விண்ணப்பம் ஒரு சில நிமிடங்களில் அங்கீகரிக்கப்படுகிறது. அட்டகாசமான வட்டி விகிதங்கள்: தற்போதைய நிலையில் ஒரு ஆண்டுக்கு 11.25% முதலில் இருந்து வட்டி விகிதம் வசூல் செய்யப்படுகிறது.
உங்களுக்கு விருப்பமான கடன் தொகை மற்றும் கடனை திருப்பி செலுத்தும் கால அவகாசம்:
கடன் பெறுநர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப கடன் தொகை மற்றும் கடனை திருப்பி செலுத்தும் கால அளவை தேர்வு செய்யலாம். தற்போது Google Pay 30,000 முதல் 10 லட்ச ரூபாய் வரை கடனாக வழங்குகிறது. மேலும் இதற்கு 6 மாதங்கள் முதல் 5 வருடங்கள் வரையிலான திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை அளிக்கிறது.
அடமானம் தேவையில்லை:
இது பர்சனல் லோன் என்பதால் இதற்கு நீங்கள் எந்த ஒரு அடமானமும் கொடுக்க தேவையில்லை. வெளிப்படையான விதிகள்:
இந்த கடன் சம்பந்தப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அப்ளிகேஷனில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
Google pay மூலமாக பர்சனல் லோன்கள்: தகுதி வரம்பு
*கடன் பெற நினைக்கும் விண்ணப்பதாரர் குறைந்தப்பட்சம் 21 வயதானவராக இருக்க வேண்டும். *இவர் இந்திய குடிமகனாக இருப்பது அவசியம்.
*முழு நேரம் அல்லது வழக்கமான வருமானம் பெறுபவருக்கு கடன் வழங்கப்படும்.
*கிரெடிட் ஸ்கோர் பற்றி பேசும்பொழுது 650 அல்லது அதற்கும் மேல் வைத்திருப்பது அவசியம்.
*உங்களிடம் சரியான மற்றும் ஆக்டிவாக உள்ள Google Pay அக்கவுண்ட் இருக்க வேண்டும்.
Google Pay மூலமாக பர்சனல் லோனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
*அப்ளிகேஷனை அப்டேட் செய்யவும்: அனைத்து அம்சங்களையும் பயன்படுத்துவதற்கு உங்களுடைய ஸ்மார்ட்போனில் Google Pay அப்ளிகேஷனின் சமீபத்திய வெர்ஷன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
*உங்களுடைய வங்கி கணக்கை இணைக்கவும்:
பணம் சரியான முறையில் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவதை உறுதி செய்ய உங்களுடைய Google Pay அக்கவுண்ட் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
*பல்வேறு கடன் ஆப்ஷன்கள்:
Google Pay அப்ளிகேஷனை திறந்து கீழே காணப்படும் பர்சனல் லோன் என்ற டாபின் கீழ் உள்ள “மேனேஜ் யுவர் மணி” என்பதை தட்டுங்கள். அதன் பிறகு “அப்ளை நவ்” என்பதை கிளிக் செய்து, விவரங்களை காணவும்.
*உங்களுடைய போன் நம்பர் மற்றும் இமெயில் ஐடியை வெரிஃபை செய்வது அவசியம்.
*அடுத்ததாக மின்னஞ்சல் குறியீடு, PAN நம்பர், பிறந்த தேதி, வேலை வகை, பணி புரியும் நிறுவனத்தின் முகவரி போன்ற தனிநபர் விவரங்களை நிரப்ப வேண்டும்.
*அடுத்த ஸ்கிரீனில் உங்களுக்கு தேவையான லோன் தொகையை செலக்ட் செய்யுங்கள்.
*விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படித்து, அதனை ஏற்கவும்.
*தகுதி வரம்புக்கு ஏற்றார் போல உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள லோன் தொகை, EMI, கால அவகாசம் போன்ற விவரங்களை ஒரு முறை படித்துவிட்டு, மேலும் தொடர்வதற்கு உறுதிப்படுத்தவும்.
*ஒரு செல்பியை கிளிக் செய்து, ஆதார் விவரங்களை நிரப்பி KYC -ஐ நிறைவு செய்யவும்.
*கடனை திருப்பி செலுத்துவதற்கு இ-மேன்டேட் அமைத்துக் கொள்ளவும்.
Google Pay மூலமாக பர்சனல் லோன்கள்: கடனை திருப்பி செலுத்தும் செயல்முறை
Google Pay மூலமாக கடனை திருப்பி செலுத்துவது என்பது மிகவும் எளிமையானது மற்றும் ஆட்டோமேட் செய்யப்பட்டுள்ளது. மாத EMI நேரடியாக உங்களுடைய Google Pay அக்கவுண்டில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். எனவே அபராதங்களை தவிர்ப்பதற்கு உங்களுடைய அக்கவுண்டில் போதுமான பேலன்ஸ் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
April 30, 2025 10:37 AM IST

